search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி எச்சரிக்கை"

    • உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் மற்றும் கந்தசாமி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பலகாரங்களை காட்சிப்படுத்தியும் பொட்டலமிட்டும், விநியோகம் செய்த பலகாரங்களை பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, உணவு பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் தருமபுரி நகராட்சி மற்றும் இலக்கியம்பட்டி, செந்தில் நகர், நேதாஜி பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சைவ, அசைவ உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா, தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் மற்றும் கந்தசாமி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது ஒரு சில உணவகங்களில் குளிர் பதன பெட்டிகளில் இருந்து இருந்து பழைய இருப்பு வைத்திருந்த கெட்டுப் போன கோழி மற்றும் ஆட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்து அழித்து அப்புறப்படுத்தப்பட்டது.

    இறைச்சிகளில் குறிப்பாக சில்லி சிக்கன், மீன் இறைச்சிகளில் செயற்கை நிறமேற்றி பவுடர்கள் கண்டிப்பாக பயன்பாடு கூடாது என உணவக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள இரண்டு உணவகங்கங்களுக்கு மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் அளித்து உரிய காலத்தில் குறைபாடுகளை களையாவிட்டால் கடையை சீல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டது.

    மேலும் உணவகங்களில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பைகளில் சாம்பார்,சட்னி மற்றும் சூடான உணவுப் பொருள்கள் பார்சல் செய்வதை கண்டிப்பாக அறவே தவிர்க்க வேண்டும். தவறினால் அபராதம் விதித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உணவகங்களுக்கு எச்சரிக்கப்பட்டது.

    பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பீடா பெட்டி கடைகள், குளிர்பான கடைகள், தேநீர் கடைகள் மற்றும் பழக்கடைகள் மற்றும் சிற்றுண்டி உணவுகளில் ஆய்வு செய்தபோது ஒரு சில கடைகள் உரிய உரிமம் பெறாமலும் காலாவதியான உணவு பாதுகாப்பு சான்றிதழ் வைத்திருந்து வணிகம் செய்வதை கண்டு எச்சரித்து உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு விண்ணப்பித்து சான்று பெற்று நுகர்வோர் காணும் வகையில் மாட்டி வைத்து வணிகம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.

    ஒரு சில பீடா கடைகள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகள் இருந்து உரிய தேதி இல்லாமலும் உரிய விவரங்கள் அச்சிடாத தின்பண்டங்கள், அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பலகாரங்களை காட்சிப்படுத்தியும் பொட்டலமிட்டும், விநியோகம் செய்த பலகாரங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் நெகிழியில் டீ, காபி மற்றும் சூடான உணவு பொருள்கள் கண்டிப்பாக பார்சல் விடக்கூடாது என வணிகர்களுக்கு விழிப்புணர்வு செய்தனர். ஆய்வில் பத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள், பேக்கரி மற்றும் பெட்டி கடைகளுக்கு அபராதமாக மொத்தம் ரூ.12,000 விதிக்கப்பட்டது. 

    • புகார்களின் அடிப்படையில் பல்லடம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள சில ஆட்டோக்கள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் இயங்குவதாகவும் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உத்தரவின்பேரில், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி பல்லடம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் 4 ஆட்டோக்கள் உரிய ஆவணம் இன்றி இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி கூறுகையில்,பு கார்களின் அடிப்படையில் பல்லடம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது இதையடுத்து ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்களை உரிய ஆவணங்களுடன் இயக்கவேண்டும், கூடுதல் கட்டணம் வசூலித்தல், அதிக பயணிகளுடன் ஆட்டோவை இயக்குதல், உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடக்கூடாது என ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து இனி அடிக்கடி ஆய்வு செய்யப்படும். விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுனர்களது லைசன்ஸ் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் எச்சரிக்கை விடுத்தார். #schoolbooks
    சென்னை:

    தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் கூறியதாவது:-

    சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மட்டும் அல்ல மற்ற மாணவர்களும் தமிழ்ப்பாடப்புத்தகம் 2, 3, 4, 5, 7, 8 வகுப்பு வரை பாடநூல் கழக ஆன்லைனில் (www.tamilnadufeecomittee.com) கடந்த 15-ந்தேதி முதல் விற்கப்பட்டு வருகிறது. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டு அதற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகிறது. அவை வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.



    புதிய பாடப்புத்தகங்கள் அனைத்தும் 23-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படும். தேவைப்படும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் புதிய பாடப்புத்தகங்கள் 1, 6, 9, 11 வகுப்பு பாடப்புத்தகங்கள் அனைத்தும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் டி.பி.ஐ.வளாகத்திலும், கோட்டூர்புரம் அண்ணாநூற்றாண்டு விழா நூலகத்திலும் மற்றும் தனியார் கடைகளிலும் விற்கப்பட உள்ளன.

    இந்த விற்பனை அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சில கடைகளில் பாடப்புத்தகங்களின் விலையை விட கூடுதல் விலைக்கு பாடப்புத்தகம் விற்கப்படுகிறது. அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட பாடப்புத்தகமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாங்கள் அச்சடித்த விலை ரூ.110 என்று உள்ளது. ஆனால் முதல் பக்கத்தில் ரூ.150 என்று ரப்பர் ஸ்டாம்பு குத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கூடுதல் விலைக்கு பாடப்புத்தகங்களை விற்றால் கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை அச்சடித்த புத்தகங்கள் நூலகத்தில் இடம் பெற உள்ளன. இந்த நூலகம் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் உள்ள 10 மாடி கட்டிடத்தின் தரைதளத்தில் தொடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு ஜெகன்நாதன் தெரிவித்தார்.  #schoolbooks
    ×